ஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டி. சச்சின் அணியை வீழ்த்திய வார்னே அணி
sachin
ஓய்வுபெற்ற கிரிக்கெட் விரர்கள் பங்கேற்று விளையாடி வரும் ஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டி தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் சச்சின் தலைமையிலான சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி அணியும் ஷேர்ன் வார்னே தலைமையிலானா வார்னே வாரியர்ஸ் அணியும் விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் வார்னே வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த வார்னே அணி தொடக்கம் முதலே அதிரடியான விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சங்கக்கரா 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக பொல்லாக் 55 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் வார்னே வாரியர்ஸ் அணி தொடரை கைப்பற்றியது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *