shadow

air

புதுதில்லியில் உள்ள All India Radio நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NSD (AIR) 20 (9) 2015-S

பணி: News Reader-cum-Translator (Tamil)

காலியிடங்கள்: 05

வயதுவரம்பு: 30.03.2015 தேதியின்படி 21 – 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,000

தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன், பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருப்பது விரும்பத்தக்கது.

பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

 

பணி: News Reader-cum- Translator (Malayalam)

காலியிடங்கள்: 05

வயதுவரம்பு: 30.03.2015 தேதியின்படி 21 – 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,000

தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு மலையாள மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல்வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன், பட்டப்படிப்பில் மலையாளத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருப்பது விரும்பத்தக்கது.

பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், மலையாளத்தில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குரலவளத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர 29.05.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi – 110001.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.newsonair.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply