shadow

ajith,vijay and tamannaதிரையுலகில் ஒரு நடிகை தொடர்ச்சியாக ஒரே ஹீரோவுடன் இரண்டு படங்கள் நடித்துவிட்டால் போதும் உடனே ஊடகங்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக கூறி கதை கட்டி அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சில நேரங்களில் இந்த செய்தி உண்மையாகக்கூட மாறிவிடுகிறது.

இந்த கருத்தைத்தான் சமீபத்தில் இயக்குனர் ஏ.எல் விஜய் கூறியிருந்தார். ‘நானும் அமலாபாலும் சாதாரண நண்பர்களாகத்தான் பழகினோம். ஆனால் ஊடகங்கள் நாங்கள் காதலிப்பதாக வதந்தியை கிளப்பிவிட்டன. அந்த வதந்திகள் வந்தபின்னர்தான் நாங்கள் உண்மையிலேயே காதலிக்க தொடங்கினோம்” என்று கூறினார்.

ஆனால் நடிகை தமன்னா இதில் மாறுபட்டு இருக்கின்றார். பாலிவுட்டில் அவர் சாஜித்கானுடன் ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தபோதே அவருக்கும் சாஜித்கானுக்கும் காதல் என்ற கிசுகிசு கிளம்பியது. இந்நிலையில் சாஜித்கானுடன் தற்போது ஹம்சக்கல்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இருவருக்குமான காதல் திருமணத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தற்போது பாலிவுட் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

இதற்கு பதிலளித்த தமன்னா, என்னுடன் நடிக்கும் ஹீரோக்கள் அனைவரும் படத்தில் மட்டுமே ஹீரோக்கள். நிஜத்தில் அவர்கள் அனைவரும் எனக்கு சகோதரர்கள் போன்றவர்கள். என்னுடன் நடித்த விஜய், அஜீத் உள்பட அனைவரையும் நான் சகோதரர்களாகத்தான் நினைத்து பழகி வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply