shadow

alibaba_F_20100910064814சீனாவின் நம்பர் ஒன் ஆன்லைன் வர்ததக நிறுவனமாக செயல்பட்டு வரும் அலிபாபா என்ற நிருவனம் சில்லறை வர்த்தகத்தில் மாபெரும் சாதனை படைத்து உலக வர்த்தன நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஒரு நாளில் 9.3 பில்லியன் டாலர் அளவில் விற்பனை செய்துள்ளதாக அலிபாபா குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ஜோ சாய் நேற்று சீனாவில் செய்தியாலர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது நிறுவனத்தின் விற்பனை வருவாய் 57.1 பில்லியன் யுவான் அதிகரித்துள்ளது என்று கடந்த் ஆண்டு ஒரே நாளில் 150 பில்லியன் பண்டல்கள் சில்லறை வர்த்தகம் மூலம் விற்று சாதனை படைத்ததாகவும் தெரிவித்தார்.

ஆன்லைன் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களை விட சீன நிறுவனம் ஒன்று அதிக வணிகம் செய்து வருவதால் அமெரிக்க, ஐக்கிய நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு $111.54 பில்லியன் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம் கோடி ஆகும்.

Leave a Reply