shadow

 

shadow

110 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள குட்டி நாடான புர்கினா பாசோ என்ற நாட்டின் தலைநகர் அவ்கதோ என்ற நகரில் இருந்து அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்சுக்கு நேற்று புறப்பட்டு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து அதில் இருந்து 116 பேர்களும் பலியாகியுள்ளனர்.

மலேசிய விமானம் MH 17, தைவான் விமானம் ஆகிய இரண்டு விபத்துக்களை தொடர்ந்து ஒரே வாரத்தில் நடந்த மூன்றாவது விமானவிபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான வானிலை காரணமாக அல்ஜீரியாவுக்கு சென்ற விமானம் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டதகவும், இருந்தும் விமானம் திடீரென வீசிய புயற்காற்றினால் பாதிக்கப்பட்டு ஆப்பிரிக்காவில் விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். ஆனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 116 பயணிகளும் மரணம் அடைந்துவிட்டதாக அல்ஜீரிய நாட்டு அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

இந்த விமானத்தில் 50 பேர் பிரான்சையும், 24 பேர் புர்கினா பாசோவையும், 8 பேர் லெபனானையும், 4 பேர் அல்ஜீரியாவையும், 2 பேர் லக்சம்பர்ககையும், தலா ஒருவர் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நைஜீரியா, கேமரூன், உக்ரைன், ருமேனியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஸ்விப்ட் ஏர் என்ற ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான இந்த விமானத்தை அல்ஜீரிய விமான போக்குவரத்து நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply