shadow

அல்கொய்தா அமைப்பின் இந்திய தலைவர் சுதந்திர போராட்ட தியாகியின் மகனா? அதிர்ச்சி தகவல்
al queda
ஈராக், மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத இயக்கமாக உள்ள அல்கொய்தா அமைப்பின் இந்திய தலைவர் மெளலானா ஆஷிம் உமர் என்பவர் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட குடும்பத்தில் பிறந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அல்கொய்தா அமைப்பின் இந்திய தலைவராக இருந்த மெளலானா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட குடும்பத்தில் பிறந்தவர் என்பதும், 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து காணாமல் போனவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவருடைய இயற்பெயர் சானுல் ஹக்.

சானுல் ஹக் குறித்து அவருடைய தாயார் கூறியபோது, “உளவு அமைப்பினர் எனது மகன் அல்குவைதாவில் சேர்ந்து விட்டதாக எங்களிடம் தெரிவித்த போதே, நாங்கள் அவனை செத்து விட்டதாக கருத ஆரம்பித்து விட்டோம்” என்று கூறியுள்ளார்

சானுல் ஹக்கின் தந்தையும் இந்திய சுதந்திர போராட்ட தியாகியுமான இர்பான் அல் ஹக் கூறியபோது, ” ”சானுல் எப்போதும் புத்தகங்களுடன்தான் காணப்படுவான். ஒரு முறை என்னிடம் மதரசாவில்  படிக்க விரும்புகிறேன் என்றான்.  சாம்பல் பகுதியில் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது 1995-ம் ஆண்டு வாக்கில் திடீரென்று என்னிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டான். மெக்கா சென்று மேற்படிப்பு படிக்கப் போவதாக கூறினான்.

இங்குள்ள கல்லூரியிலேயே படி..இங்கேயே வேலையை தேடிக் கொண்டு குடும்பத்துக்கு உதவியாக இரு என்று கூறினேன். அவனது மாமா, மவுலானாவை அடித்தே விட்டார். அப்போதே நாங்கள் அவனது வாழ்க்கையை கண்டு பயந்தோம். பயந்தபடியே இப்போது நடந்து விட்டது” என்று கூறியுள்ளார்

சுதந்திரப் போரட்டத்திற்காக பாடுபட்ட ஒருவருடைய மகன் அல்கொய்தாவின் இந்திய தலைவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Leave a Reply