shadow

மனைவியின் டுவீட்டுக்கு மதிப்பு கொடுத்து ரூ.10 லட்சம் செலவு செய்த அக்சயகுமார்

‘2.0’ படத்தின் வில்லன் நடிகரும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான அக்சய்குமாரின் மனைவி டுவீட் ட்விங்கிள் கண்ணா சமீபத்தில் மும்பை கடற்கரையில் திறந்தவெளியில் ஒருவர் மலம் கழிக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டார். மேலும் அவர் மும்பை மாநகராட்சியை தொடர்பு கொண்டு கடற்கரை பகுதியில் நவீன கழிப்பறை அமைக்க தான் நிதியுதவி செய்வதாகவும் கூறினார்.

இதனை அடுத்து மும்பை நிர்வாகம் கொடுத்த ஒப்புதலின்படி, ரூ.10 லட்சம் செலவில் நவீன மொபைல் கழிப்பறை அக்சயகுமார் அமைத்து கொடுத்துள்ளார். இந்த கழிப்பறை அந்த பகுதி மக்களுக்கு பெரும் பயனுடையதாக இருக்கும் என்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மனைவி பதிவு செய்த ஒரே ஒரு டுவீட்டுக்கு மதிப்பளித்து ரூ.10 லட்சம் செலவில் மொபைல் கழிப்பறை அமைத்த அக்சயகுமாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *