akshaykumarநல்ல திரைக்கதை அமைந்தால் செக்ஸ் காமெடி படங்களில் மீண்டும் நடிக்க விருப்பம் என பாலிவுட் நடிகர் அக்சயகுமார் சர்ச்சையான பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார். இதனால் பாலிவுட் படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு அக்சயகுமார், ஆபிரகாம் மற்றும் ரெமிசென் ஆகியார் நடித்த கரம் மசாலா என்ற திரைப்படம் செக்ஸ் காமெடி படமாக ரிலீஸாகி நல்ல வசூலை கொடுத்தது. ஆனால் அந்த படம் பலவித சர்ச்சைகளை கிளப்பியதால் அதன்பிறகு அதுமாதிரியான படத்தை எடுக்க யாரும் விரும்பவில்லை.

ஆனால் தற்போது தமன்னாவுடன் “இட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் அக்சயகுமார், இதுவும் கரம் மசாலா போன்றே ஒரு செக்ஸ் காமெடி திரைப்படம் என்றும் இதுமாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது அறிவுரையை ஏற்று தமன்னாவும் இனிவரும் காலங்களில் செக்ஸ் காமெடி படங்களில் அதிகம் நடிப்பார் என்றும் அவர் கூறினார்.

எனது படத்தை விரும்பி பார்ப்பவர்கள் மட்டும் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கட்டும் என்றும் பிடிக்காதவர்கள் எனது படத்தை பார்க்க வரவேண்டாம் என்றும் திமிராக கூறியுள்ள அக்சயகுமார், வருங்காலத்தில் செக்ஸ் காமெடி திரைப்படங்கள்தான் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

அக்சயகுமாரின் இந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *