பாலிவுட் நடிகர் அக்ஷயகுமார் சமீபகாலமாக தமிழ் ரீமேக் படங்களில் நடிக்க அதிக விருப்பம் கொண்டுள்ளார். விஜய் நடித்த மிகப்பெரிய ஹிட் படமான துப்பாக்கியில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இயக்கிய அதே முருகதாஸ்தான், இந்தியிலும் இயக்குகிறார். ஹாலிடே என்ற துப்பாக்கி ரீமேக் படம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில் அக்ஷயகுமார் தனது அடுத்த படத்தை அஜீத் நடித்த வீரம் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். வீரம் படத்தின் இந்தி உரிமையை பெற்றுள்ள அக்ஷயகுமார், தானே அஜீத் நடித்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில் தமன்னா நடித்த கேரக்டரை இந்தியிலும் அவரே நடிக்கிறார் என்பது கூடுதல் செய்தி. இந்தியில் படத்தை இயக்க இருப்பவர் பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் ஒருவர்.

முதலில் விஜய், அடுத்து அஜீத் என மாறி மாறி இருவர் படங்களின் ரீமேக்கின் நடித்து வரும் அக்ஷயகுமார், அடுத்து விஜய் நடித்துக்கொண்டிருக்கும் முருகதாஸ் படத்தையும், அஜீத் நடிக்க இருக்கும் கவுதம் மேனன் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜீத்தின் ஆரம்பம் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை சல்மான்கான் பெற்றுள்ளார் என்பது கூடுதல் செய்தி ஆகும்.

Leave a Reply