shadow

shamitabகமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நிலையில் அவருடைய இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.  இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள அக்ஷ்ராஹாசன் குறித்து பால்கீ கூறும்போது, “”அக்‌ஷரா நடிப்பிற்காகப் பிறந்தவர். அப்பா கமல், அம்மா சரிகா இருவரின் சிறப்பும் அக்‌ஷராவிடம் உள்ளது. இந்தப் படத்தில் மிகவும் கடினமான கதாபாத்திரம் எனினும் அக்‌ஷரா அந்த பாத்திரத்தை மிக எளிதாக நடித்துள்ளார்.” என்று அக்‌ஷராவைப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றார்.

இந்த படத்தில் தங்கை அக்ஷ்ராவுக்காக அக்கா ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Leave a Reply