shadow

பிற அம்சங்கள்:
யோகி அரடே கமல்
மேலிருந்து பார்க்கும்போது ஒரு தாமரை போன்ற வடிவிலுள்ள மூழ்கிய தோட்டமானது, ஷேக்ஸ்பியர் மற்றும்மார்டின் லூதர் கிங் ஆகியோரிலிருந்து சுவாமி விவேகானந்தா மற்றும் சுவாமிநாராயணன் வரையான உலக அறிவுமேதைகளின் மேற்கோள்கள் பொறிக்கப்பட்ட பெரிய கற்களை உருப்படுத்திக் காட்டுகிறது.
நில்காந்த் அபிசேகம்
பக்தர்கள் நீலகாந்த வர்னி சிலைமீது தண்ணீர் ஊற்றப்படும் சமயச்சடங்கான அபிசேகத்தை வழங்கி, தெய்வநிலை சார்ந்த மேம்பாடு மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றப்படுதல் போன்றவற்றுக்காக தமது பெருமதிப்பு மற்றும் வழிபாடுகளை வெளிப்படுத்துவர்.
நாராயண சரோவார்
நாராயண சரோவார் என்பது முதன்மையான நினைவுச்சின்னத்தைச் சூழவுள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரியில் 151 ஆறுகள் மற்றும் ஏரிகளிலிருந்து வரும் புனித நீர்கள் உள்ளன, இவை மானசரோவார் உள்ளடங்கலாக சுவாமிநாராயணனால் புனிதமாக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. நாராயணன் சரோவாரைச் சூழ 108 இறைவனின் பெயர்களைக் குறிக்கின்ற 108 கௌமுக்குகள் (gaumukhs) உள்ளன, இவற்றிலிருந்தே புனித நீர் முன்னே வழங்கப்படும்.
பிரேம்வதி அக்ரகாரம் (Premvati Ahargruh)
பிரேம்வதி அக்ரகாரம் அல்லது பிரேம்வதி ஃபூட் கோர்ட் என்பது இந்தியா மஹாராஷ்டிராவிலுள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளில் வடிவமைக்கப்பட்ட சைவ உணவகம் மற்றும் ஆயுர்வேத கடைத்தெருவாகும். இந்த உணவகம் பல்வேறு பாரம்பரிய உணவுகளை வழங்குகிறது.
சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம்
வளாகத்துக்கு உள்ளே அமைந்துள்ள சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கான அக்சர்தம் மையம் சமூக அமைதி மற்றும் தொடர்பான தலைப்புகளின் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது. இதன் ஊடாக கல்வியாளர்களும் மாணவர்களும் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சியை நடத்தலாம். ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணித்திட்டங்களைச் செய்துமுடிப்பதற்கும் இம்மையத்துடன் உடன் தங்கள் ஆய்வறிக்கைகளை இணைக்கலாம். கல்வி, மருத்துவ உதவி, பழங்குடி மற்றும் கிராமப்புற நலன், சூழலியல் மற்றும் பண்பாடு ஆகியவை குறித்த ஆய்வுகள் இம்மையத்தில் நடக்கின்றன.
வரலாறும் வளர்ச்சியும்
திட்டமிடுதல்
யோகிஜி மாகாராஜின் கனவாக இந்தக் கட்டடம் 1968 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்டது. அச்சமயத்தில் சுவாமிநாராயணன் சான்ஸ்தாவின் மதத்தலைவராக இருந்த யோகிஜி மகாராஜ், அந்த நேரத்தில் புது தில்லியில் வாழ்ந்த சுவாமிநாராயணனின் சாதுக்களுக்கு யமுனா ஆற்றங்கரைமீது ஒரு பிரமாண்டமான கோவில் கட்டுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.நிலத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இருந்தபோதும் மிகச் சிறிய முன்னேற்றமே கண்டது. 1971 ஆம் ஆண்டில் யோகிஜி மகாராஜ் இறந்தார்.
1982 ஆம் ஆண்டில், யோகிஜி மகாராஜைப் பின் தொடர்ந்து மதத் தலைவராகிய பிரமுக் சுவாமி மகாராஜ் தனது குருவின் கனவை நிறைவேற்ற, தில்லியில் கோயிலைக் கட்டுவதற்கான சாத்தியங்களைக் கவனிக்கும்படி பக்தர்களைத் தூண்டினார். இந்தத் திட்டத்துக்கான ஒரு கோரிக்கையானது டில்லி மேம்பாட்டு ஆணையதிற்கு (DDA) அனுப்பப்பட்டது, மேலும் காசியாபாத், குர்கோவன் மற்றும் பரிதாபாத் உள்ளடங்கலாக பல இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. கோயிலை யமுனாஆற்றங்கரையில் கட்டவேண்டும் என்ற யோகிஜி மகாராஜின் விருப்பங்களைப் பின்பற்றுவதில் பிரமுக் சுவாமி மகாராஜ் உறுதியாக இருந்தார்.
18 ஆண்டுகளுக்குப் பின்னர், ஏப்ரல் 2000 ஆம் ஆண்டில் தில்லி மேம்பாட்டு ஆணையமானது 60 ஏக்கர்s (2 மீ2) நிலத்தை வழங்கியது, உத்தரப் பிரதேசம் மாநில அரசாங்கம் இப்பணித்திட்டத்துக்காக 30 ஏக்கர்s (1 மீ2) வை வழங்கியது. நிலம் பெறப்பட்ட பின்னர், பணிதிட்டத்தின் வெற்றிக்காக, அந்த நிலத்தில் பிரமுக் சுவாமி மகாராஜால் பூமி பூசை செய்யப்பட்டு கோயிலின் கட்டுமானம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதியன்று தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு இரு நாட்கள் இருக்கும் வேளையில் அக்கட்டுமானம் நிறைவு செய்யப்பட்டு, 2005 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆன் தேதியன்று அக்சர்தம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
உருவாக்கம்
அக்சர்தம் பணித்திட்டத்தை மேற்பார்வை செய்யவென எட்டு சாதுக்கள் அடங்கிய குழு அமர்த்தப்பட்டது. இந்தக் குழுவிலிருந்த பெரும்பாலானவர்களுக்கு குஜராத் காந்திநகரிலுள்ள அக்சர்தம்மில் பணிபுரிந்த அனுபவம் இருந்தது. இது உருவாக்கப்பட்டபோது, நினைவுச்சின்னத்தின் கட்டமைப்பின் பலநேரங்களில் பிரமுக் சுவாமி மஹாராஜிடம் ஆலோசனை பெறப்பட்டது
 

அக்ஷர்தம் வளாகத்தின் கட்டுமானம்:
1997 மற்றும் 1998 ஆம் ஆண்டளவில், கல் செதுக்குவதைத் தொடங்கியதன் மூலம் கோயிலை உருவாக்கத் தொடங்குவதற்கான கோரிக்கை விடப்பட்டது. இருந்தபோதிலும், இந்தத் திட்டத்தை பிரமுக் சுவாமி மகாராஜ் நிராகரித்தார், நிலம் பெறப்பட்ட பின்னரே கட்டுமானம் தொடங்கவேண்டும் என அவர் நம்பினார். தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மென்மையான ஆற்றங்கரை காரணமாக,அடித்தளக் கட்டுமானத்துக்கு அந்த இடம் உகந்தாகக் கருதப்படவில்லை. இதன் விளைவாக, ஆழமான அடித்தளத்தைத் தவிர்க்க முடியவில்லை. நிலையான அத்திவாரத்தைக் கட்ட, 15-அடிகள் (4.6 மீ) பாறைகள் மற்றும் மணல் ஆகியன கம்பி வலையுடன் சேர்த்துக் கலக்கப்பட்டு, ஐந்து அடி சிமெண்ட் கலவை மேலிடப்பட்டது. ஐந்து மில்லியன் சுடப்பட்ட செங்கற்கள் அஸ்திவாரத்தை மேலுமொரு 21.5-அடிகள் (6.6 மீ) க்கு உயர்த்தின. நினைவுச்சின்னத்தின் கீழே முக்கிய ஆதாரத்தை உருவாக்க இந்த செங்கற்களுக்கு மேலே மேலும் மூன்று அடி சிமெண்ட் கலவை போடப்பட்டது.
2 ஜூலை 2001 ஆம் ஆண்டு, செதுக்கிய முதலாவது கல் பதிக்கப்பட்டது. எட்டு சாதுக்களடங்கிய குழுவில் கட்டடக்கலை மற்றும் தெய்வச் சிற்பங்களைச் செதுக்குதல் பற்றிய ஒரு இந்து சமயநூலான பஞ்சாட்சர சாத்திரத்தில் புலமைத்துவம் பெற்றவர்கள் அடங்கியிருந்தனர். இந்த சாதுக்கள் கல் செதுக்கல் பணியையும் எட்டாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இருந்த இந்திய சிற்ப வேலைப்பாடு பற்றிய ஆராய்ச்சியையும் கண்காணித்தார்கள். இந்த ஆராய்ச்சியானது அங்கோர்வாட், ஜோத்பூர், பூரி, கொனார்க் போன்ற இடங்களிலும், மேலும் தென்னிந்தியாவிலுள்ள பிற கோயில்களிலும் நடந்தது.
அக்சர்தம்மின் கட்டுமானப் பணிக்கு எழாயிரம் சிற்பக்கலைஞர்களும் மூவாயிரம் தொண்டர்களும் பணியமர்த்தப்பட்டனர். ராஜஸ்தான்மாநிலத்திலிருந்து வந்த 6,000 டன்களுக்கும் அதிகமான இளஞ்சிவப்பு மணற்கல்லைக் கொண்டு அந்த மாநிலத்திலுள்ள இடங்களைச் சூழ, பட்டறைத் தளங்கள் அமைக்கப்பட்டன. சிற்பக்கலைஞர்கள் இடையே வரட்சியால் பாதிக்கப்பட்ட உள்ளூர் விவசாயிகள் மற்றும் 1500 பழங்குடிப் பெண்கள் ஆகியோர் இருந்தனர், இந்தப் பணியால் அவர்களுக்குப் பொருளாதார நன்மை கிடைத்தது. ஆரம்பத்தில் கல் வெட்டும் எந்திரத்தால் செய்யப்பட்ட வேலையானது, பின்னர் விரிவான சிற்பவேலைகள் கையால் செய்யப்பட்டன. ஒவ்வொரு இரவும், கட்டுமானத் தளத்தில் நாலாயிரம் பணியாளர்களும் தொண்டர்களும் வேலைசெய்த அக்சர்தம்மிற்கு நூற்றுக்கும் அதிகமான ட்ரக் வண்டிகள் அனுப்பப்பட்டன.

திறப்பு விழா[
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி அக்சர்தம் பிரமுக் சுவாமி மகாராஜ் அவர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டு,[35] இந்திய ஜனாதிபதி, முனைவர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பிரதம மந்திரி, மன்மோகன் சிங் மற்றும் இந்தியப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் லால் கிருஷ்ணா அத்வானி ஆகிய 25,000 விருந்தினர்கள் முன்னிலையில் முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய நினைவுச்சின்னத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர் அதுபற்றி ஜனாதிபதி கலாம், இங்கு அக்சர்தம் சமூகத்துடன் இணைகிறது என்பதுபற்றி உரை வழங்கினார், மேலும் பின்வருமாறு கூறி உரையை நிறைவு செய்தார்,
2009 தீ:
ஜூன் மாதம் 2009 ஆம் ஆண்டு, நினைவுச்சின்னத்துக்கு உள்ளே ஏற்பட்ட தீவிபத்தில் 11-அடிகள் (3.4 மீ) உயரமான சுவாமிநாராயணன் சிலை உட்பட ஆறு உலோகச் சிலைகள் சேதமாகின. இந்த ஆறு சிலைகளும் மரத்தாலான பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது, அப்பீடம் தீக்கு இறையாகியது. சிலைகள் தலைகீழாகக் கீழே விழுந்து, நடைபாதையில் உருண்டு சேதமாகின. நினைவுச்சின்னத்தின் குளிரவைக்கும் தொகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து உண்டானது. அன்றிலிருந்து நினைவுச்சின்னம் மூடப்பட்டுள்ளது.

சர்ச்சைகள்:
மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் திருவண்ணாமலையிலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மூன்று கோயில்களும் அக்சர்தம்மை விடப் பெரியவை எனக் கோரப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களின் தர்மகர்த்தாக்கள் அக்சர்தம்மின் கின்னஸ் உலக சாதனையை எதிர்த்துள்ளனர்.
மதுரையிலுள்ள மீனாட்சி கோயில் 850 அடி (260 மீ) நீளமும் 800 அடி (240 மீ) அகலமும் கொண்டது. இந்தக் கோயிலின் முழுப் பரப்பளவு 17 ஏக்கர்s (0.069 கிமீ2) ஆக உள்ள நிலையில், ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் 156 ஏக்கர்s (0.63 கிமீ2) பரப்பையும், திருவண்ணாமலையிலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் 24 ஏக்கர்s (0.097 கிமீ2) பரப்பையும் கொண்டுள்ளன. கோயில்கள் எனப்படுபவை வணங்குவதற்கான இடங்களே, ஆகவே அங்கு அக்சர்தம்மிலுள்ளது போல உணவகங்கள், படகோட்டும் வசதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகளும் கோயிலின் பகுதியாக இருக்க முடியாது என்று மீனாட்சி கோயிலிலுள்ள அதிகாரிகள் வாதாடியுள்ளனர். உண்மையான கோயிலின் கட்டுமானப் பகுதியானது நிலப்பகுதியைவிடக் கூடுதலான முக்கியமானது என்றும் அவர்கள் வாதாடியுள்ளனர்
அக்சர்தம் காந்திநகர்.
காந்திநகர், குஜராத்திலுள்ள அக்சர்தம், தில்லி அக்சர்தத்தின் சகோதர வளாகமாகும். காந்திநகரிலுள்ள நினைவுச்சின்னமும் BAPS ஆல் கட்டப்பட்டது. ஆரவாரத்துக்கிடையில் 1992 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட, அக்சர்தம் காந்திநகர் ஒரு நினைவுச்சின்னம், கண்காட்சிக் கூடங்கள், மிகப்பெரிய தூண்கள், சிந்தனைமிக்க தோட்டங்கள் மற்றும் பெருமளவில் புது தில்லியிலுள்ள நினைவுச்சின்னம் போலவேயான ஒரு உணவகம் ஆகியன அடங்குகின்றன. தில்லியிலுள்ள நினைவுச்சின்னத்தின் கட்டடக்கலையும் சிற்பங்களும் காந்திநகரிலுள்ள நினைவுச்சின்னத்தை ஒத்துள்ளன.
காந்திநகர் அக்சர்தம் உலகெங்குமிருந்து மில்லியன் கணக்கான வருகையாளர்களைக் கவர்ந்துள்ளது, இதில் பில் கிளிங்டன் “அக்சர்தம் இந்தியாவில் மட்டும் தனித்துவமான ஒரு இடம் அல்ல, இது முழு உலகிற்கும் தனித்துவமானது. இது நான் கற்பனை செய்திருந்ததைவிட அதிகளவுக்கு அழகானது.தாஜ் மஹால் என்பது நிச்சயமாக அழகானதுதான், ஆனால் இந்த இடம் அழகுடன் இணைந்து அழகான செய்தியையும் கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளதும் அடங்கும் (முற்றும்)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *