shadow

தந்தையை பார்க்க பரிதாபமாக உள்ளது. முலாயம்சிங் மகள் வேதனை

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலின்போது சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனால் அந்த கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் முலாயம்சிங் அவர்களின் தற்போதைய நிலையும் கட்சியும் நிலையும் பரிதாபமாக இருப்பதால் அகிலேஷ் யாதவ் கட்சியை முலாயம்சிங் யாதவ் இடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முலாயம்சிங்கின் இளைய மகள் அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்ட விரோத இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அபர்ணா, இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்போருக்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply