Chennai Today News

விஜய் சாதனையை அஜீத் முறியடிப்பார். ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய சர்ச்சை கருத்து.

விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் பல தடைகளுக்கு பின்னர் வெளிவந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த சாதனையை ரஜினியின் லிங்கா முறியடித்துவிடும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் கத்தி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

வெறும் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த சாதனையை அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ 11 நாட்களில் முறியடித்துவிடும் என்றும், வேறு எந்த படமும் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸின் இந்த கருத்தால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அஜீத்திடம் முருகதாஸ் கால்ஷீட் கேட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அஜீத்துக்கு ஐஸ் வைப்பதற்காக இதுபோன்ற கருத்தை அவர் கூறியுள்ளதாக பலர் கமெண்ட் அடித்துள்ளனர். முருகதாஸின் இந்த கருத்துக்கு அஜீத் ரசிகர்களிடம் இருந்து வரவேற்பும், விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடம் இருந்து கண்டனமும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் முருகதாஸ் கூறிய இந்த கருத்து முருகதாஸ் பெயரால் ஏற்படுத்தப்படுத்த போலி டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவருடைய உண்மையான டுவிட்டர் கணக்கில் இதுபோன்ற கருத்து எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!