shadow

அஜித்தின் ‘விவேகம்’ வியாபாரத்தில் புதிய சாதனை

அஜித் நடித்த ‘வேதாளம்’ கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த ஆண்டு அவர் நடித்த எந்த படமும் வெளியாகாததால், தற்போது தயாராகி வரும் ‘விவேகம்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாம். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற க்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் முன்னணியில் இருப்பதாகவும், இதுவரை தமிழ் சினிமா செய்யாத மிகப்பெரிய வியாபாரத்தை இந்த படம் செய்து புதிய சாதனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Leave a Reply