shadow

அஜித்தின் ‘வேதாளம்’ படத்துடன் கனெக்ஷன் ஆகும் ‘விஜய் 59’

theriஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது தற்போது கசிந்துள்ளது.

டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் இணைந்து வெளியாகவுள்ளதால், பர்ஸ்ட் லுக் டிசைன் செய்யும் குழுவில் இருந்து டைட்டில் கசிந்துவிட்டதாகவும், தற்போது அந்த டைட்டில் இணையத்தில் வலம் வந்து கொண்டிருப்பதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலின்படி ‘விஜய் 59’ படத்திற்கு ‘தெறி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த டைட்டிலின் பெயரில்தான் ஃபர்ஸ்ட் லுக் டிசைன் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியிருப்பதாகவும், அதையும் வரும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும் என அட்லி தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜீத்தின் ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘தெறிக்க விடலாமா” என்ற வார்த்தையில் இருந்து விஜய் 59 படத்தின் டைட்டில் திருடப்பட்டதாக அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், சத்யராஜ், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

Leave a Reply