shadow

அஜீத்தின் ‘ரெட்’ படத்தின் தொடர்ச்சியா ‘தல 56’?
redd
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘தல 56’ திரைப்படம் இதுவரை ‘பாட்ஷா படத்தின் ரீமேக் என்றும் அந்த படத்தின் தொடர்ச்சி என்றும் ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்நிலையில் உண்மையில் இந்த படத்திற்கும் ‘பாட்ஷா’ படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும், இந்த படம் ‘ரெட்’ படத்தின் தொடர்ச்சி என்றும் படக்குழுவினர்களில் ஒருவர் ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார்.

இந்த படத்தில் முதல்பாதியில் வரும் அஜீத்தின் தோற்றம் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்தாலும், பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளில் ‘ரெட்’ படத்தில் வருவது போல மொட்டை தலையுடன் தோன்றுவதாகவும், கூறப்படுகிறது. இந்த பிளாஷ்பேக் காட்சி ஒன்றில்தான் நகைச்சுவை நடிகை வித்யூலேகா ராமன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், ராகுல்தேவ், சூரி, அஸ்வின் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் வரும் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply