அஜித் 57: ஏப்ரல் 16-ல் அறிவிப்பு. மே 1 முதல் படப்பிடிப்பு
ajith
தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சிறுத்தை சிவா அல்லது விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று இரண்டு விதமான செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சிறுத்தை சிவா என்பது உறுதியாகிவிட்டது. அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டெக்னீஷியன்கள் குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், எடிட்டராக ப்ரவீணும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 16ல் அறிவிக்கப்பட்டு மே மாதம் 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவருடைய கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் காஜல் அகர்வால் அடுத்த சாய்ஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Chennai Today News: Ajith’s next starts on May 1

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *