ajith in veeram

அஜித், தமன்னா நடித்த வீரம், கடந்த ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகி தமிழகமெங்கும் பெரும் வெற்றியை கொடுத்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு Veerudokkadae  என்ற பெயரில் வருகிற 21ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழில் பெற்ற வெற்றியை போலவே தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரா முழுவதும் சுமார் 300 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. தமன்னா ஏற்கனவே தெலுங்கு பிரபலமான நடிகை என்பதால் தியேட்டர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜித், 6பேக், 8பேக் என உடற்கட்டுடன் வருவதாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் எதுவும் உண்மையில்லை என்றும் ஓரளவிற்கு உடல் எடை குறைந்தால் போதும் என கவுதம் மேனன் கூறியதால் அஜீத், ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திலும் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் தொடர்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் அஜித்திற்கு தீனா படத்தில் வருவது போன்று துருதுருப்பான வேடம் என கவுதம் மேனன் தரப்பு கூறுகிறது.

Leave a Reply