shadow

அஜித்தை அடியோடு மாற்றிய பிட்னெஸ் டிரைனர் இவர்தான்


தல அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ஜரி செய்து சென்னையிலும், வெளிநாட்டிலும் ஓய்வு எடுத்தார் என்பது தெரிந்ததே. அதன்பின்னர் அவர் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அஜித் 57’ படத்தில் நடிக்க தயாரானபோது அவர் உடன் கன்னாபின்னா என்று வெயிட் ஏறிவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் சிறுத்தை சிவா, இதற்காகவே சென்னையை சேர்ந்த பிட்னெஸ் டிரைனரை நியமித்தார். யூசூப் என்ற அந்த டிரைனர் அஜித்தின் எடையை கொஞ்சம் கொஞ்சமாக மாறி சர்வதேச போலீஸ் கேரக்டருக்கு பிட்டாகும்படி செய்தார். அதன் விளைவுதான் இன்று வெளியாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்லுக்கில் உள்ள அட்டகாசமான தோற்றம்

அஜித்தை பிட்னெஸ் ஆக மாற்றிய யூசுப்பிற்கு மரியாதை அளிக்கும் வகையில் அவருடைய பெயரும் ஃபர்ஸ்ட்லுக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது அஜித் ரசிகர்களால் வாழ்த்து

க்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply