இணையத்தை கலக்கும் அஜீத் எடுத்த அப்புக்குட்டி புகைப்படங்கள்

shadow

அஜீத் தற்போது ‘தல 56’ படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார். இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அஜீத், தேசிய விருது பெற்ற துணை நடிகர் அப்புக்குட்டியை வைத்து குறும்படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவர் அப்புக்குட்டியை வைத்து குறும்படம் இயக்கவில்லை என்றும், போட்டோஷூட் மட்டுமே எடுத்தார் என்றும் அஜீத் தரப்பில் இருந்து கூறப்பட்டு அந்த புகைப்படங்களையும் ஆன்லைனில் தற்போது வெளியிட்டுள்ளனர்.

புதிய ஸ்டைலில் அப்புக்குட்டியின் புகைப்படங்கள் அட்டகாசமாக இருப்பதாக டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நவீன தொழில்நுட்ப கேமராவில் அஜீத்தே இந்த புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போதைக்கு அஜீத் குறும்படத்தை இயக்க மாட்டார் என்றும் ஆனால் எதிர்காலத்தில் அவர் ஒரு குறும்படத்தையோ அல்லது திரைப்படத்தையோ இயக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த போட்டோஷூட் சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த அப்புக்குட்டி, ‘என்னை அஜீத் சார் புகைப்படம் எடுத்தது நான் செய்த பாக்கியம்’ என்று கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *