shadow

‘பாட்ஷா 2’ படத்தில் அஜீத் நடித்தால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும். சுரேஷ் கிருஷ்ணா
baashaa2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆர்.எம்.வீரப்பனின் 90வது பிறந்த நாளில் பேசியபோது ‘பாட்ஷா’ படம் போல இன்னொரு படம் வருவது சந்தேகம்’ என்றும் கபாலி’யை பாட்ஷா போல எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கூறினார்.

இந்நிலையில் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் முயன்றும் ரஜினி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனால் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை அஜீத் நடிப்பில் இயக்க விரும்புவதாக இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நடித்தால் கண்டிப்பாக ‘பாட்ஷா’ முதல் பாகத்தை போல இரண்டாம் பாகமும் ஹிட் ஆகும். அஜீத்திடம் இதுகுறித்து விரைவில் பேசவுள்ளேன். அவர் ஒப்புதல் அளித்தால் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை ஆரம்பிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ரஜினி நடித்த ‘பில்லா’ படத்தில் அஜீத் நடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாலும், நெகட்டிவ் கேரக்டர் அஜீத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என்பதாலும், அஜீத் ‘பாட்ஷா 2’ படத்தில் நடிக்க வேண்டும் என்றே பலர் விரும்புகின்றனர். ரசிகர்களின் ஆசையை அஜீத் நிறைவேற்றி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply