shadow

அஜித்தின் ‘விவேகம்’ படப்பிடிப்பு முடியும் தேதி இதுதான்

தல அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தயாரித்து வரும் ‘விவேகம்’ திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் விடுபட்ட ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் செர்பியா சென்றுள்ளது.

இந்த படப்பிடிப்பு வரும் வியாழன் அன்று முடிவடையவுள்ளதாகவும், வரும் சனி அல்லது ஞாயிறு அன்று படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா சென்னை திரும்பியவுடன் ‘விவேகம்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல் ரிலீஸ் தேதிகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply