shadow

விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் அஜித் வில்லன்

ajithvijayஅஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘வேதாளம்’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்து கலக்கியவர் ‘கபீர்சிங்’. இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு வேறு தமிழ் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடிக்கவுள்ள ‘றெக்க’ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘றெக்க’ படத்தில் இரண்டு வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும், ஒருவர் கபீர்சிங் என்றும் இன்னொருவர் ஹரிஷ் உத்தமன் என்றும் இந்த படத்தை இயக்கவுள்ள ரத்தினசிவா தெரிவித்துள்ளார். வக்கீல் வேடத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி இந்த இரண்டு வில்லன்களிடமும் தனித்தனியாக மாட்டிக்கொண்டு பின்னர் எப்படி அவர்களிடம் இருந்து றெக்க கட்டி தப்பிக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே 12 முதல் சென்னையில் தொடங்கவுள்ளது.

Leave a Reply