shadow

விஜய் டிவி ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் அஜித்-விஜய்?
ajith and vijay
விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக கோபிநாத் நடத்தி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பலதரப்பட்ட சமூக பிரச்சனைகள் குறித்து அலசப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதன்முதலாக சினிமா சம்பந்தமான ஒரு விவாதம் நடைபெறவுள்ளதாகவும், அதுவும் தற்போது கோலிவுட்டின் இருதுருவங்களாக இருந்து வரும் அஜீத்-விஜய் குறித்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்-விஜய் ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தபோதிலும், அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வதை ஒரு பார்ட் டைம் வேலையாக செய்து வருகின்றனர். சில சமயம் இந்த மோதல் எல்லை மீறி, காவல்துறையில் புகார் செய்யும் அளவுக்கு சமீபத்தில் சீரியஸ் ஆக மாறியது என்பதை அறிவோம்.

இந்நிலையில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் அஜீத்-விஜய் ரசிகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பல சமூக, மத, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு சொன்ன கோபிநாத் அஜித்-விஜய் ரசிகர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

English Summary: Ajith Vijay programme in Vijay TV Neeya Naana?

Leave a Reply