அஜித் என் காலில் விழுவார். பிரபல பெண் நடனக்கலைஞர்.

ajith-57அஜித் அஜித் என்றாலே கோலிவுட் திரையுலக வட்டாரத்தில் ஒரு தனி மரியாதை உண்டு. அவரது நடிப்பை விமர்சிப்பவர்கள் கூட அவரது மனித நேயத்தை புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த அளவுக்கு அவர் பழகும் விதம் உள்ளதாக கோலிவுட்டினர் கூறுவதுண்டு

இந்நிலையில் அஜித் என் காலில் விழுந்து ஆசிரிவாதம் பெற்ற பின்னரே நடனம் கற்பார் என்று பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கலா மாஸ்டர், “”அஜித் ஒரு சிறந்த மனிதர். அவர் நடனம் கற்க எனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது தினமும் எனது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, நடனம் பயின்றார். அவரை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது” என்று கூறினார்.
கலா மாஸ்டரின் இந்த தகவல் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *