shadow

அஜித் நடித்த வலிமை படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ’வலிமை’ படக்குழுவினர் சென்னைக்கு கிளம்பி விட்டனர்.

மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு வரும் நேரடி விமானத்தில் அஜித் கிளம்பிவிட்டதாகவும், அவர் நாளை சென்னை வந்து அடைவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.