shadow

உலகில் யாருக்கும் கிடைக்காத பெருமையை பெற்ற ‘குட்டித்தல’
kutti-thala
குட்டித்தல’ என அன்புடன் அஜித் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்தின் மகன் ஆத்விக்கின் உருவத்தை அஜித் ரசிகர்கள் பச்சை குத்தி வருவதாக சமூக இணையதளங்களான டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் செய்திகள் வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் உருவங்களை மட்டுமே இதுவரை டாட்டூ வரைந்து வரும் நிலையில் உலகிலேயே முதன்முதலாக நடிகர் ஒருவரின் மகன் அதாவது அஜித்தின் மகன் உருவப்படத்தை ரசிகர்கள் டாட்டூ குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

குட்டித்தல ஆத்விக் பிறந்த பத்து மாதங்கள் ஆகிவிட்டபோதிலும் இதுவரை அவருடைய புகைப்படம் எதுவும் வெளிவராத நிலையில் முதன்முதலாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித் தனது மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வந்திருந்தபோது ஆத்விக்கின் புகைப்படம் இணையதளங்களில் வெளியானது. இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக விரைவாக பரவி வருவது மட்டுமின்றி தற்போது ஆத்விக்கின் உருவப்படத்தை பல அஜித் ரசிகர்கள் பச்சை குத்தியும் வருகின்றனர்.

kutti thala2

Leave a Reply