shadow

அஜித்தின் கார் சண்டையை காப்பியடித்தேன். சாந்தனு பாக்யராஜ்

பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு நடித்த ‘முப்பரிமாணம்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அதில் வரும் ஒரு கார் சேசிங் காட்சியை பலர் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்த காட்சி குறித்து சாந்தனு கூறியபோது, ‘கார் சேசிங் காட்சியின் படப்பிடிப்பின்போது, அஜித் நடித்த பல படங்களில் கார் சண்டைக்காட்சிகளை மனதில் வைத்து கொண்டு செய்ததாக சாந்தனு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

அஜித் குறித்து புள்ளிவைத்தாலே கோலம் போடும் அஜித் ரசிகர்கள் உடனடியாக டுவிட்டர் களத்தில் இறங்கி சாந்தனுவின் டுவிட்டை பிரபலமாக்கி வருகின்றனர்.

அதிரூபன் இயக்கியுள்ள இந்த படத்தில் சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே, தம்பிராமையா, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply