shadow

வரும் விழாயக்கிழமை ‘வேதாளம்’ தரும் டபுள் சந்தோஷம்
vedhalam
அஜீத், நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘வேதாளம்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் காப்பியும் தயாராகி விட்டதாகவும், இவ்வார இறுதியில் வெளிநாடுகளுக்கு டிவிடி அனுப்பப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் வரும் வியாழன் அதிகாலை 12மணிக்கு ‘வேதாளம்’ படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. அதே நாளில் அதே நேரத்தில் ‘வேதாளம்’ படத்தின் ரிசர்வேஷன் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் டபுள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

மேலும் பெரும்பாலான வெளிநாடுகளில் ‘வேதாளம்’ படத்தின் பிரிமியர் காட்சிகள் வரும் 9ஆம் தேதி திரையிடப்படவுள்ளது. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரிமியர் காட்சி குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

English Summary: Vedhalam trailer and reservation starts from Thursday

Leave a Reply