shadow

ennai arindhalஅஜீத், அனுஷ்கா,த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் கவுதம் மேனன் இயக்கி வரும் திரைப்படத்தின் டைட்டில் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

‘என்னை அறிந்தால்’ என்பதுதான் அஜீத் பட டைட்டில் என இயக்குனர் கவுதம்மேனன் அறிவித்துள்ளார். இன்று காலை அறிவிக்கப்பட்ட இந்த டைட்டில் டுவிட்டர் டிரெண்டில் உலக அளவில் இரண்டாவது இடம் பிடித்து பெரும் சாதனை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள அஜீத் ரசிகர்கள் இந்த டைட்டிலை தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்வதால் டுவிட்டரில் 2வது இடத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இதுவரை டுவிட்டர் டிரெண்டில் இருந்த ‘கத்தி’ திரைப்படம் அஜீத்தின் டைட்டில் அறிவிப்பினால் கீழே தள்ளப்பட்டுவிட்டது. ரஜினியை அடுத்த மிக அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் அஜீத்தின் பட டைட்டிலுக்கு இவ்வளவு பெரும் வரவேற்பு இருப்பதை பார்த்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் உள்ள அஜீத்தின் கேரக்டரான சத்யதேவ், முதல் 45 நிமிடங்களுக்கு யார் என்பதே பெரும் சஸ்பென்சாக இருக்கும் என்றும், அவரையே அவர் அறிவதுதான் படத்தின் முக்கிய கரு என்பதால் இந்த டைட்டிலை தெரிவு செய்ததாக இயக்குனர் கவுதம் மேனன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

Leave a Reply