shadow

rajini-vijay-ajith copyகடந்த சில நாட்களாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்து வருகிறது. குமுதம் கருத்துக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அஜித் ரசிகர்களும் , அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று விஜய் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் கருத்து மோதல் செய்து வருகின்றனர். இதனிடையில் ரஜினி ரசிகர்கள் ரஜினி ஒருவர்தான் சூப்பர் ஸ்டார். அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது யாருக்கும் கிடையாது என்றும் முழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் பத்திரிகை நிருபர் ஒருவர் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் உண்மையில் யாருக்கு பொருந்தும் என்று கேட்ட ஒரு கேள்விக்கு விஜய் நல்ல நடிகர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்யை விட அஜீத்துக்குத்தான் மிகச்சரியாக இருக்கும். இது என்னுடைய அனுபவத்தை வைத்து கூறும் கருத்து என்று கூறியுள்ளார். கே.எஸ். ரவிகுமார் அஜீத்தை வைத்து வரலாறு, வில்லன் ஆகிய படங்களையும், விஜய் நடிப்பில் மின்சாரக்கண்ணா என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ்.ரவிகுமாரின் சூப்பர் ஸ்டார் கருத்து காரணமாக அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். இந்த பிரச்சனை என்று முடியும் என்று மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

Leave a Reply