அஜித் சூப்பர் ஸ்டார், விஜய் சூப்பர் டான்சர். ‘புகழ்’ நாயகி சுரப்

surabhiநீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெய் நடித்த ‘புகழ்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ‘இவன் வேற மாதிரி’ படத்தின் நாயகி சுரபி நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடைபெற்றபோது சுரபி அஜித் விஜய் மற்றும் சூர்யா குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அஜித் குறித்து சுரபி கூறியபோது, ‘அஜித் என்ற வார்த்தையை கேட்டால் போதும் மனதில் குதூகலம் ஏற்படும். அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் எளிமையை அவர் கடைபிடிக்கும் விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது என்று கூறினார்

விஜய் குறித்து அவர் கூறியதாவது: விஜய் ஒரு திறமையான நடிகர், டான்ஸர், பாடகர், நடிகர் என பல திறமைகளை கொண்டுள்ளவர்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் தன்மை உள்ளவர் சூர்யா. இவர்கள் மூவருடனும் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று கூறியுள்ளார்.

உதயம் என்.எச் 4, பொறியாளன் ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ள ‘புகழ்’ படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்த படத்தை வருண்மணியன் தயாரித்துள்ளார்.,

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *