அஜித் ஒரு வெள்ளைத்தோல் ரஜினி. பிரபல பாடகர்

ajith and rajiniகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தள்ளிப்போகாதே’ என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த பாடலை பாடியவர் ADK என்று அழைக்கப்படும் தினேஷ் கனகரத்தினம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்று கூறியுள்ளார்.

அஜித்தை தனது மனைவிக்கும் மனைவியின் தம்பிக்கும் ரொம்ப பிடிக்கும் என்றும் ஆரம்பத்தில் தனக்கு பிடிக்காமல் இருந்த அஜித்தை பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்தது என்றும் தற்போது கிட்டத்தட்ட அவரது வெறியனாகவே மாறிவிட்டதாகவும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் அஜித்தின் படங்கள் மட்டுமின்றி அவருடைய நல்ல குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களால் அவருடைய தீவிர ரசிகராகவே மாறிவிட்டதாகவும், சுருக்கமாக சொல்வதென்றால் அஜித் ஒரு வெள்ளைத்தோல் ரஜினி என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *