shadow

ajith and trisha1993ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் அறிமுகமான அஜீத் தற்போது கவுதம் மேனனின் 55 வது படத்தில் நடித்து வருகிறார். திரைக்கு வந்து  22 வருடம் ஆனதை ஒட்டி அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 22 வது வருடத்தை சிறப்பாக கொண்டாட அஜீத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் அஜீத் தற்போது நடித்து வரும் கவுதம் மேனன் படத்தில் 25 வயது வாலிபனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். த்ரிஷாவுக்கு தற்போது 30 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பில் அஜீத்தின் இளமையான தோற்றத்தை பார்த்து படக்குழுவினர் அசந்துபோனதாக கூறப்படுகிறது. த்ரிஷாவை விட அஜீத் இளமையாக இருப்பதாக பலர் அவரை பாராட்டினர். 30 வயது த்ரிஷாவுக்கு 25 வயது அஜீத் ஜோடியாக நடிப்பதாக அஜீத்- த்ரிஷா முன்னிலையில் படக்குழுவினர் விளையாட்டாக கூறியதை கேட்டு அஜீத் மற்றும் த்ரிஷா சிரித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply