அஜித்தின் ‘விவேகம்’ அட்டகாசமான டீசர்! தெறிக்கும் டுவிட்டர்

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் இன்று அதிகாலை மிகச்சரியாக 12.01 மணிக்கு வெளியாகியது. டீசர் வெளியான ஒருசில நிமிடங்களில் டுவிட்டரில் உலக அளவிற்கு டிரெண்ட் ஆனது.

அஜித்தின் அட்டகாசமான காட்சிகள், தெறிக்கும் வசனங்கள் குறிப்பாக இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்டா..தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு சொன்னாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது’ என்ற வசனம், ஆக்சன் மற்றும் பிரமாண்டம், அஜித் பைக்கில் வரும் ஸ்டைல், ஆகியவை அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

மேலும் அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை தெறிக்க வைப்பதாக உள்ளது. வெற்றியின் வேற லெவல் கேமிரா, ரூபனின் கனகச்சித எடிட்டிங் ஆகியவை இந்த படத்தை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *