‘தலை விடுதலை விழிகளில் பாரடா’: விவேகம் படத்தின் வீரமான பாடல் வரிகள்

தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் சிங்கிள் ஆடியோ பாடல் நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த பாடலின் வீரமான வரிகளை தற்போது பார்ப்போம். இந்த பாடலை இயக்குனர் சிறுத்தை சிவா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலை விடுதலை விழிகளில் பாரடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தலை விடுதலை விழிகளில் பாரடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறுவோம்
கால்களில் கீழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும்போது
தோள்களில் கீழே நீ ஏறு ஏறு

உயிர் குருதியில் உறுதியை சேரடா
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

நெவர் எவெர் கிவ் அப்

வேகம் என்னும் தீயிலே எண்ணெய் ஊற்று
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து
ரத்த நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

படை நெருங்கிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே
கடை நொடிப்பகை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே

தலை விடுதலை விழிகளில் பாரடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *