shadow

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டப்பிங் தொடக்கம்

தல அஜித் நடித்த விவேகம்’ திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால் இந்த படத்தின் வியாபாரமும் மிக அபாரமாக நடந்து வருகிறது. ரஜினி படத்தை அடுத்து அதிக தொகைக்கு விலைபோகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்று முதல் டப்பிங் பணியும் தொடங்கிவிட்டது. அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் முதலில் மற்ற நடிகர், நடிகைகள் டப்பிங் செய்வார்கள் என்றும் கடைசியில் அஜித் டப்பிங் செய்வார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply