shadow

கபாலி’யை அடுத்து புதிய சாதனை நிகழ்த்துகிறது அஜித்தின் ‘விவேகம்’

இதுவரை வெளிவந்த தென்னிந்திய திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் டீசர் யூடியூபில் 4.64 லட்சம் லைக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்க முடியாத நிலையில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசர் இந்த சாதனையை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் ‘கபாலி’ சாதனை முறியடிக்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே ‘விவேகம்’ பட டீசர் வெளியான ஒருசில நாட்களில் 10 மில்லியன் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் 4 லட்சம் லைக்குகளுக்கும் அதிகமாக பெற்று ‘கபாலி’க்கு அடுத்த இடத்தில் உள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் 60 ஆயிரம் லைக்குகளை பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிடும் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ‘விவேகம்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

Leave a Reply