shadow

அஜித்துக்காக பூக்கோலம் போட்ட கேரள ரசிகர்கள்

thala-57அஜித்துக்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கேராளவில் உள்ள அஜித் ரசிகர்கள் இன்று ஓணம் பண்டிகையை அழகழகான அஜித் பட பூக்கோலங்களை போட்டு கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக கேரளாவில் உள்ள முதியோர் இல்லங்களில் அன்னதானம் செய்து வந்த அஜித் ரசிகர்கள் இன்று அழகழகான வண்ண மலர்களினால் ‘அஜித் 57’ மற்றும் அஜித் உருவத்தை பூக்களினால் வரைந்துள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர். மேலும் இணையதளங்களில் இன்று அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply