shadow

yennai arindhaalஅஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் உருவான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டீஸர் இன்று அதிகாலை 12மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தொழில்நுட்ப காரணமாக டீஸர் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று இரவு முழுவதும் டீஸர் வெளியீட்டிற்காக இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த அஜீத் ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே ஏற்கனவே டீஸர் வெளிவராத கடுப்பில் இருந்த அஜீத் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் மேலும் கடுப்பேற்றும் வகையில், டீஸரையே சொன்ன தேதியில் வெளியிட முடியாதவர்கள் எப்படி படத்தை வெளியிட போகின்றனர் என்று ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் இரண்டொரு நாட்களில் ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. கெளதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

Leave a Reply