shadow

மீண்டும் இணைகிறது வேதாளம் வெற்றி கூட்டணி
siva
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி வசூலில் செய்துகொண்டு வருகிறது. முதல் இரண்டு நாட்களில் இந்த படம் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த வசூலை அஜீத்தே கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே ‘வேதாளம்’ படத்திற்கு பின்னர் வேறு ஒரு முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கலாம் என முடிவு செய்திருந்த அஜீத், தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜீத்துக்கு அடுத்த வாரம் கால் மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆறுமாத காலம் ஓய்வெடுக்கவுள்ள அஜீத், ஓய்வுக்கு பின்னர் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply