shadow

ajith and vijay copyசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மூன்று முகம்’. இந்த படத்தின் ரீமேக் உரிமையை ‘ஜிகர்தண்டா’ உரிமையாளர் கதிரேசன், சத்யா மூவீஸ் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பனிடம் இருந்து பெற்றுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் அஜீத் அல்லது விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறப்பட்டன.

இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் கதிரேசனிடம் கொடுத்த ஆலோசனையின்படி அஜீத், விஜய் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டரான அலெக்ஸ்பாண்டியன் கேரக்டரில் அஜீத்தும், அருண் மற்றும் ஜான் கேரக்டர்களில் விஜய்யும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அஜீத், விஜய் ஆகிய இருவரும் சந்திக்கும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறாது என்பதால் அஜீத், விஜய் ரசிகர்களிடையே பிரச்சனைகள் எதுவும் வராது என்றும், இருவருக்கும் சம வாய்ப்புள்ளதாக திரைப்படம் அமையும் என்றும் வெங்கட்பிரபு ஆலோசனை கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் இருவரிடமும் கதிரேசன் மிகத்தீவிரமாக பேசிவருகிறார் என்பது மட்டும் உண்மை. ஒருவேளை இருவரும் நடிக்க ஒப்புக்கொண்டால் இந்த படத்தை வெங்கட்பிரபுவே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply