ஒரே இடத்தில் அஜித்-விஜய் படப்பிடிப்பு: சந்திப்பு நடக்குமா?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதற்காக இம்மாத இறுதியில் படக்குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

இந்த நிலையில் இம்மாத இறுதியில் அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அஜித், விஜய் ஆகிய இருவரின் படங்களும் ஒரே நாட்டில் நடைபெறவிருப்பதால் இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *