shadow

இந்த வாரம் அஜித்-விஜய் சந்திப்பு நடக்குமா?

அஜித், விஜய் இருவரும் தொழில் முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்கள் என்பது இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

இந்நிலையில் இருவரும் பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பல வருடங்கள் ஆகிறது. அஜித் எந்த பொது நிகழ்விலும் கடந்த சில ஆண்டுகளாக கலந்து கொள்ளாததால் அஜித்-விஜய் சந்திப்பு நடைபெறவில்லை

இந்நிலையில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்காக திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோது இருவரும் சந்திக்க வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. ஆனால் இந்த உண்ணாவிரதத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் தற்போது சென்னை பின்னி மில்லில் இன்று முதல் விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. அதேபோல் இதே பின்னி மில்லில் ‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்பும் இன்னும் ஓரிரு நாளில் நடைபெறவுள்ளது. எனவே இந்த முறை அஜித்-விஜய் சந்திப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply