ajith and vijayகடந்த வாரம் பிரபல வார இதழ் குமுதம் நடத்திய ‘அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற கருத்துக்கணிப்பு முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்தே பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. விஜய் முறைகேடாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை விலை கொடுத்து வாங்கியதாக அஜீத் ரசிகர்கள் குற்றம் சாட்டினர். மேலும் ரஜினி ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் என்பது ரஜினி என்ற ஒரே ஒருவருக்குத்தான் பொருந்தும். அதை யாருக்கும் விட்டுத்தர முடியாது என்றும் கருத்து கூறி வந்தனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அஜீத், விஜய், மற்றும் ரஜினி ரசிகர்கள் மாறி மாறி கூறி வந்த கருத்துக்களால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் குமுதம் வார இதழ் விஜய்க்கு வழங்கிய சூப்பர் ஸ்டார் பட்டத்தை திரும்பப்பெற போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து அஜீத் மற்றும் விஜய் கலந்து பேசி இரு நடிகர்களும் நேரடியாக தலையிட்டு மோதலுக்கு முடிவு காணவேண்டும் என இருவருக்கும் நெருக்கமான ஒருசிலர் கொடுத்த ஆலோசனையின் பேரில் இருவரும் கலந்து பேசி தங்களது ரசிகர்களின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேச இருப்பதாக செய்திகள் இன்று காலை வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் பட்டம் உள்பட எந்த பட்டமும் தமக்கு தேவையில்லை என்றும் ரசிகர்களின் மனதில் இருக்கும் அன்பு என்ற பட்டம் போதும் என்று இரு நடிகர்களும் கூட்டாக அறிக்கை விட்டு இருதரப்பு ரசிகர்களின் மோதலை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த வார இறுதியில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களின் முக்கிய நிர்வாகிகள் சென்னைக்கு அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *