shadow

13aa

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் மற்றும் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில்  நடந்த ஒரு பிறந்த நாள் விழாவில் இந்த படத்தின் ரகசிய செய்தியை கசியவிட்டுள்ளார். ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற தளபதி படம் ரீமேக் செய்யப்படுவதாகவும், ரஜினி நடித்த சூர்யா வேடத்தில் அஜீத்தும், மம்முட்டி நடித்த தேவா வேடத்தில் விஜய்யும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த செய்தி மிக வேகமாக கோலிவுட்டில் பரவி வருகின்றது.

இரு கேரக்டர்களும் சமமாக இருப்பதால் இந்த ரீமேக் படத்தில் நடிக்க அஜீத் மற்றும் விஜய்க்கு எவ்வித தயக்கமும் இல்லையென்று கூறப்படுகிறது.

Leave a Reply