அஜீத்-விஜய் ரசிகர்களை மோதவிட்டு டிஆர்பியை உயர்த்தும் பிரபல டிவி?
neeya naana
அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் சாதாரணமாகவே டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் காரசாரமாக மோதிக்கொள்வதுண்டு. ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்வதுண்டு.  சமீபத்தில் விஜய் ரசிகர்கள் காவல்துறையினரிடம் புகார் செய்யும் அளவுக்கு இந்த விஷயம் பெரிதாகி கொண்டே போகிறது.

இந்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவதைபோல அஜீத்-விஜய் ரசிகர்களை அழைத்து ‘நீயா நானா’ என்ற நிகழ்ச்சியை நேற்று பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்தியுள்ளது. இதில் அஜீத்-விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அஜீத்-விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டதாகவும், இதன் காரணமாக படப்பிடிப்பு அரங்கில் பதட்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு தீர்வு காண விவாதிக்கவுள்ள நிலையில் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட டிவி விவாதம் நடத்துவது தேவையா? என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்

அஜீத்-விஜய் ரசிகர்களை மோதவிட்டு இதன் மூலம் தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளும் முயற்சி சரிதானா? என்பதை அந்த டிவி சிந்தித்து பார்க்க வேண்டும் என டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

English Summary: NeeyaNaana Rumours Spreading That Few Vijay fans beaten by Ajith Fans.. 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *