shadow

10 copyகுமுதம் வார இதழ் விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பிரச்சனை இன்னும் முடிந்தபாடில்லை. நேற்று கே.எஸ்.ரவிகுமார் அளித்த பேட்டியில், “உண்மையாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் அஜீத்துக்குத்தான் மிகப்பொருத்தமாக இருக்கும்’ என்று கூறியதை அடுத்து விஜய் ரசிகர்கள் அவர் மீது ஆத்திரமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

மேலும் கே.எஸ்.ரவிகுமாரின் ‘லிங்கா’ படத்தை புறக்கணிப்போம் என்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர். இதனால் ‘லிங்கா’ படத்தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை புறக்கணித்தால் பெருமளவு வசூல் பாதிக்க்கும் என படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் லிங்காவுக்கு ஆதரவாக அஜீத் ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இன்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அஜீத் ரசிகர்கள், ‘சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நேர்மையான கருத்து கூறிய கே.எஸ்.ரவிகுமாரின் ‘லிங்கா’ வை மாபெரும் வெற்றிப்படமாக்க அஜீத் ரசிகர்கள் பாடுபடுவோம் என்று அதிரடியாக தெரிவித்துள்ளனர். குமுதத்தில் ஆரம்பித்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பிரச்சனை தற்போது லிங்கா வரை வந்துள்ளது. இது எதில் முடியப்போகிறது என்று தெரியவில்லை.

Leave a Reply