shadow

Ajith Trisha @ Mankatha Movie Picsஅஜீத், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்து வரும் கவுதம் மேனன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அஜீத்- த்ரிஷா திருமண காட்சி படமாக்கப்பட்டது.

அஜீத், த்ரிஷா ஆகியோர் இந்த படத்தில் ஐந்து வயது குழந்தைக்கு பெற்றோர்களாக நடிக்கின்றனர். ப்ளாஷ் பேக் காட்சியாக அஜீத் – த்ரிஷா திருமணம் நடைபெறுவது போன்ற காட்சி இந்த படத்தில் வருகிறது. இதன் படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்தது. நிஜ திருமணம் போலவே பிரமாண்டமான திருமண மண்டப செட்டில் இந்த திருமண காட்சி படமாக்கப்பட்டது. அஜீத்- த்ரிஷாவின் திருமணத்திற்கு அரசியல்வாதிகள் உள்பட பல பெரிய மனிதர்கள் வந்து வாழ்த்தும் காட்சிகளும் படமாக்கப்பட்டது. அஜீத் பட்டுவேட்டியும் பட்டு சட்டையும் அணிந்திருந்தார். த்ரிஷாவுக்கு பட்டுசேலை காஸ்ட்யூம் கொடுக்கப்பட்டிருந்தது.

அஜித்- த்ரிஷாவின் ஐந்து வயது குழந்தையாக இந்த படத்தில் பேபி அங்கிதா நடிக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுதம் மேனன், ஹாரீஸ் ஜெயராஜுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply