shadow

ஒரே கேரக்டரில் அஜித்-ஸ்ருதிஹாசன்

ajithசூர்யா நடிப்பில் ஹரி இயக்கி வரும் சிங்கம் 3′ படத்தின் நாயகிகளில் ஒருவரான ஸ்ருதிஹாசன் சர்வதேச போலீஸ் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அதே கேரக்டரில்தான் அஜித்தும் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சர்வதேச அளவில் கிரிமினல் செய்யும் வில்லனை பிடிக்க அஜித் FBI அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் கேரக்டருக்காக அஜித்துக்கு ஹாலிவுட் லுக்கில் மேக்கப் போடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி,சசிகுமார், ஆக்ஷன் கிங் அர்ஜூன் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Leave a Reply